மேதகு

0
9

மேதகு

கிழக்கு வானின் சூரியனாய். எழுபத்திரண்டு அகவைதனில் உதித்திட்டான் எம்தலைவன்.

தமிழினத்தின் அகராதியாய் தனித்துவத்தின் அடையாளமாய் தரணியிலே வந்துதித்த தவத்தின் புதல்வன்

எம்தலைவன்.

தம்பியாய், அண்ணனாய், பிரபாவாய், தலைவராய், தமிழீழத் தலைவராய், தேசியத் தலைவராய், தமிழ் தேசியத் தலைவராய், தமிழினத் தலைவராய், மேதகுவாய் பல பரிமாணம் பெற்ற எம் பார்வதியின் வேலுப்பிள்ளை பிரபாகரா எம் ஒளியே.

தமிழனின் மூச்சாய், தமிழனின் பேச்சாய், தமிழனின் நாடித் துடிப்பாய் கார்த்திகை இருபத்தாறில் தரணியில் வந்துதித்த எம் இனத்தின் கலங்கரை விளக்கே. உம்மை வாழ்த்த எம் சிந்தையில் சீரில்லை.

எம் வார்த்தையில் மொழியில்லை. அனாதையாய் கிடக்கின்றோம்.

தமிழிலே உருவாகி, தமிழிலே மூச்சாகி, தமிழிலே பேச்சாகி, தமிழிலே வாழ்வாகி, தமிழுக்காய் தனைக் கொடுத்த தாரக மந்திரமே எங்கள் அண்ணா.

நீர் உதித்த இந்த நாளை எம் சிந்தையில் நிறுத்தி உம்மிடம் கேட்கின்றோம். எம்மை ஒருமுறை மன்னித்து மீண்டும் ஒருமுறை பிறந்துவிடு. எம் இனத்தின் காவலனே. சேர்ந்தே செம்மை செய்வோம் எம் இனத்தின் விதியை.

Previous articleவிதவை தாய்