மேடையில் வலியால் துடித்த ரசிக்கருக்காக பாதுகாவலரை அதட்டிய ரஜினி – வைரலாகும் வீடியோ
tags – Rajinikanth, Rajini
நடிகர் ரஜினிகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். நாளையோடு இந்த சந்திப்பு முடிவடையவுள்ள நிலையில் ரஜினி தன் அரசியல் முடிவை அறிவிக்கவுள்ளார்.
ரசிகர்கள் ஒவ்வொருவராக ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில் வாகன விபத்தில் கை உடைந்த ஒரு ரசிகர் ரஜினியை சந்திக்க வந்திருந்தார்.
அவர் மேடையில் ஏறி ரஜினிக்கு அருகில் சென்றதும் பாதுகாவலர் ஒருவர் தோள் மீது கைவைத்து இழுத்தார். அப்போது அந்த ரசிகர் வலியால் துடித்ததால் ரஜினி கோபமானார். காவலரை அதட்டி நிறுத்தச்சொன்னார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: