தீர்வு! கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை, கண்ணில் கட்டி, கண் சிவப்பு, கண் அரிப்பு, கண் நோய்கள்!

0

கண் சம்பந்தமான சகல பிரச்சனைகளுக்குமான தீர்வு. கண்டிப்பாக பகிருங்கள் கண் பிரச்சனை உள்ளவர்கள் பயனடையட்டும்!

கண்வலி குறைய

அறிகுறிகள்:
கண்வலி.

கண் அரிப்பு.

கண்சிவப்பு.

தேவையான பொருட்கள்:

வில்வ தளிர் இலை.

செய்முறை:

வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

கண்வலி குறைய

அறிகுறிகள்:

கண்வலி.

தேவையான பொருட்கள்:

கருவேலம் இலை.

சீரகம்.

வெற்றிலை.

செய்முறை:

கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நரட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.

கண்நோய்கள் குறைய

அறிகுறிகள்:

கண்நோய்கள்.

தேவையான பொருட்கள்:

அருகம்புல்.

மிளகு.

சீரகம்.

நல்லெண்ணெய்.

செய்முறை:

அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்நோய்கள் குறையும்.

கண்ணில் கட்டி குறைய‌

அறிகுறிகள்:

கண்ணில் கட்டி

கண் சிவப்பு

கண் வலி

தேவையான பொருள்கள்:

மரமஞ்சள்.

மஞ்சள்.

படிகாரம்.

பன்னீர்.

செய்முறை:

10 மி.லி பன்னீரில்10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் மஞ்சள் மற்றும் 3 கிராம் படிகாரம் ஆகியவற்றை கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி அந்த நீரை கொண்டு 7 நாட்கள் முகம், கண்கள் ஆகியவற்றை நன்றாக கழுவி வந்தால் கண்ணில் ஏற்படும் கட்டிகள் குறைந்து கண் சிவப்பு, கண் வலி ஆகியவை குறையும்.

கண்வலி குறைய

அறிகுறிகள்:

கண்வலி.

கண் சிவப்பாக இருத்தல்.

தேவையான பொருட்கள்:

புளியம் பூ.

செய்முறை:

புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.

கண்வலி தைலம்

கீழ்கண்ட மூலிகைகளை எண்ணெயில் காய்ச்சி தைலம் செய்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:

கண் வலி.

கண் எரிச்சல்.

மங்கலான பார்வை.

தேவையான பொருள்கள்:

கரிசலாங்கண்ணி சாறு.

பொன்னாங்கண்ணி சாறு.

கீழாநெல்லி சாறு.

சோற்றுக்கற்றாழை.

எள் எண்ணெய்.

விளக்கெண்ணெய்.

நெய்.

வெள்ளை மிளகு.

சந்தனக்கட்டை.

வெட்டி வேர்.

பசும்பால்.

இளநீர்.

செய்முறை:

கரிசலாங்கண்ணியை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி ஆகியவற்றின் வேரை நீக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

சோற்றுக்கற்றாழை தோல் நீக்கி சோற்றை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

ஒரு மண் பானையில் எள் எண்ணெயை ஊற்றி சூடேறியதும் விளக்கெண்ணெய் ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு அனைத்து சாறுகளையும் ஊற்றி மூடி வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எடுத்து ஆற வைக்க வேண்டும்.

பிறகு வெள்ளை மிளகை உடைத்து 200 மி.லி பசும்பாலில் 1 மணி நேரம் ஊற வைத்து அதே பாலை கொண்டு மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.

சந்தனக்கட்டையை மாவாக இடித்து 200 மி.லி இளநீரில் 2 மணி நேரம் ஊற வைத்து மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.

வெட்டி வேரை இடித்து தைல பானையில் போட வேண்டும்.

தைல பானையை மீண்டும் சிறு தீயில் காய்ச்சி தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:

காலையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வர வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை ஆகியவை குறையும்.

குறிப்பு:

இந்த தைலத்தை தேய்த்து வரும் நாட்களில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். தயிர், இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 28.5.2018 திங்கட்கிழமை!
Next articleரோஜாப் பூக்களை இப்படி செய்து சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!