மூக்கரிப்பு, காதுவலி, உதடு வெடிப்பு உள்ளதா? அது இதன் அறிகுறிதான்!

0
1206

மூக்கில் அரிப்பு, காதுவலி, உதடு வெடிப்பு இது போன்று நமது உடலில் ஏற்படும் சாதாரண பிரச்சனைகளை கூட அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான அர்த்தங்கள் என்ன?

மூக்கு மற்றும் கண்கள் தொடர்ந்து அரித்துக் கொண்டிருந்தால், அதற்கு ஜலதோசம் விரைவில் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.

முகத்தில் அரிப்பு மற்றும் நமைச்சல் ஏற்பட்டால், அது கூந்தலில் சுத்தமில்லை என்று அர்த்தம்.

வயிற்றில் வலி அல்லது வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் இருந்தால், அது கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம்.

காதில் குடைச்சல் அல்லது வலி இருந்தால், அது காய்ச்சலை வரப்போகிறது என்று அர்த்தம்.

கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கு ஆகிய இடங்களில் கருப்பான பட்டை விழுந்தால், அது கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம்.

பசி அதிகமாக எடுத்தால், அது உடலில் இன்சுலின் சுரப்பு அதிகம் உள்ளது எனவும், நீரிழிவு பிரச்சனை தொடரப் போகிறது என்று அர்த்தம்.

கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால், அது உடலில் அதிக அழுத்தம் மற்றும் அதிக சூடு இருக்கிறது என்று அர்த்தம்.

முழுங்கால் மூட்டு அல்லது கால் மணிக்கட்டில் வலி ஏற்பட்டால், அது உடலில் அதிக எடை உள்ளது அதை குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.

முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதியில் தொடர்ச்சியான வலி ஏற்பட்டால், அது எலும்புகள் தேய்மானம் அடைகிறது என்று அர்த்தம்.

உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது உடலில் நீர்ச்சத்து, எண்ணெய்பசை குறைவு என்று அர்த்தம்.

தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் ஆகிய இடங்களில் வலி இருந்தால், அது உடலில் காற்றின் அழுத்தம் அதிகரித்து, வாயுக்கள் தேங்கி உள்ளது என்று அர்த்தம்.

கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால், அது இருதயத்தில் ஏதோ ஒரு பிரச்சினை தொடங்குகிறது என்று அர்த்தம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: