முளைக்கட்டிய பூண்டின் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

0
818

ஏராளமான மக்கள் காய்கறிகள் மற்றும் முளைக்கட்ட ஆரம்பித்து விட்டால், அதனுள் நச்சுமிக்க கெமிக்கல்கள் வெளியிடப்பட்டு, உடலுக்கு தீங்கு நேரும் என்று தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இந்த கருத்து ஒருசில பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மட்டுமே பொருந்தும், பூண்டிற்கு பொருந்தாது.

ஏனெனில் சாதாரண பூண்டுகளைப் போல் முளைக்கட்டிய பூண்டுகளும் ஏராளமான நன்மைகளை தன்னுள் கொண்டதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் உணவு இரசாயனவியல் இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, முளைக்கட்டிய பூண்டுகள் சாதாரண பூண்டுகளை விட அதிக சத்துக்களை உள்ளடக்கியது என்று தெரிய வந்துள்ளது.

இப்போது முளைக்கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

புற்றுநோயை எதிர்க்கும்
பூண்டுகள் முளைக்கட்ட ஆரம்பிக்கும் போது, அதனுள் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படும். இந்த தன்மை நிறைந்த முளைக்கட்டிய பூண்டுகளை உட்கொண்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, புற்றுநோயின் அபாயம் குறையும்.

இதயம்
முளைக்கட்டிய பூண்டுகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், கார்சினோஜென்களின் செயல்பாட்டை எப்படி தடுக்கிறதோடு, அதே போல் அது உடலினுள் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்
பூண்டுகளில் இரத்தம் உறைவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் அன்ஜோன் என்னும் பொருள் உள்ளது. மேலும் இதில் உள்ள நைட்ரைட் என்னும் சேர்மம், இதய இரத்த குழாய்கள் விரிவடைய உதவும். இந்த இரண்டின் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுப்படும். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஒரு முளைக்கட்டிய பூண்டு சாப்பிடுவது நல்லது.

சரும சுருக்கம் மற்றும் முதுமை தடுக்கப்படும்
ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வழங்கி, முதுமையைத் தடுக்கும். இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம், சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, முதுமைத் தோற்றம் தள்ளிப் போடப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
நீங்கள் அடிக்கடி சளி, இருமல் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டு வந்தால், முளைக்கட்டிய பூண்டு சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள வலிமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, நோய்த்தொற்றுக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

உள்காயம்
முளைக்கட்டிய பூண்டுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, உள்காயத்தைக் குறைக்கும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையும் உள்ளது. இது உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்சனைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்சனைகளைக் கூட குறைக்கும்.

நரம்பு ஆரோக்கியம்
முளைக்கட்டிய பூண்டுகள் நரம்பு செல்கள் சீரழிவதைத் தடுக்கிறது மற்றும் அந்த செல்களுக்கு ஊட்டமளித்து, சிறப்பாக செயல்பட உதவி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

பூண்டுகளை எப்படி முளைக்கட்டச் செய்வது?
சாதாரணமாக பூண்டுகள் வெளியே காற்றோட்டமாக இருந்தால், தானாக காய்ந்து முளைக்கட்ட ஆரம்பிக்கும். ஆனால் வீட்டிலேயே காய்ந்து போகாமல் முளைக்கட்ட வைக்க வேண்டுமானால், பின்வருமாறு செய்ய வேண்டும்.

அதற்கு 2 பூண்டுகளை எடுத்து தோலுரிக்காமல், ஒரு டூத் பிக்கில் இந்த இரண்டையும் சொருகி, ஒரு டம்ளரில் நீரை ஊற்றி, டம்ளரின் மேல் சமநிலையாக வைத்து, பூண்டுகளின் வால் பகுதி நீரில் இருக்குமாறு வைத்து, சூரிய ஒளி படும் இடத்தில் 5 நாட்கள் வைக்க வேண்டும். குறிப்பாக 5 நாட்களும் வால் பகுதி நீரில் மூழ்கி இருக்குமாறு நீரின் அளவை கவனிக்க வேண்டும்.

பின் 5 நாட்கள் கழித்து, அதனை நீரில் கழுவி உட்கொள்ளலாம் அல்லது சமையலுக்கு பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: