முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திர பொருள் கண்டுபிடிப்பு!

0
311

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சங்கு விலைமதிக்க முடியாத பொருளாக காணப்படுவதாகவும் அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: