முண்டமாக மரத்தில் தொங்கிய வெளிநாட்டு பெண்: கேரளாவில் அதிர்ச்சி!

0
407

கேரளாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த பெண்ணின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

லாட்விகாவை சேர்ந்தவர் லிகா, தன்னுடைய கணவர் மற்றும் சகோதரியுடன் சிகிச்சைக்காக கேரளா வந்தவர் கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி காணாமல் போனார்.

அன்றைய தினம் கோவளம் கடற்கரைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, இவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், திருவனந்தபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது லிசாவின் உடலாக இருக்கும் என சந்தேகித்த பொலிசார் டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஏனெனில் இது லிசாவின் உடல் தான் என அவரது சகோதரி உறுதி செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: