முட்டை கெட்டுப்போய்விட்டது என்று கண்டுபிடிப்பது எப்படி?

0
758

பொதுவாக பொருள் ஒன்று கெட்டுப் போய்விட்டது என்பதனை அதிலிருந்து எழும் துர்நாற்றம் மற்றும் அதன் புறத்தோற்றத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களைக் கொண்டு அறிய முடியம் எனினும், நாம் இன்று இங்கு குறிப்பிடும் முட்டை கெட்டு விட்டதா இல்லையா என்பதனை அத்தனை இலகுவாக தெரிந்து கொள்ள முடிhது.

எனவே நாம் கடைக்குச் சென்று முட்டை வாங்கும் போது அது நல்ல முட்டையா அல்லது கெட்டுப் போன முட்டையா என்பதை நாம் எப்படி தெரிந்துக் கொள்வது என்ற குழப்பம் எம்மில் பலபேரிடம் இருக்கும் அல்லவா? அத்தகைய கெட்டுப் போன முட்டையை மிகவும் எளிதாக கண்டுப்பிடிக்க சூப்பரான டிப்ஸ் இதோ உங்களுக்காக.

ஒரு முட்டையை எடுத்து அதிகளவான தண்ணீர் நிறைத்த பாத்திரத்தில் போடும் போது முட்டை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் அல்லது பக்கவாட்டு பகுதியை ஒட்டியதாக காணப்படுமாயின் அது நல்ல முட்டையாகவும், மாறாக அந்த முட்டை தண்ணீரில் மிதந்தவாறு காணப்பட்டால் அது கெட்டுப்போன முட்டையாகவும் கருதப்படும்.

அடுத்து, ஒரு முட்டையை எடுத்து நம்முடைய காதுக்கு பக்கத்தில் வைத்து ஆட்டிப்பார்த்தல், ஒரு விதமான சலசலவென்ற சத்தம் கேட்டால்; அந்த முட்டை முற்றிலுமாக கெட்டுப் போனதாக கருதப்படும்.

மேலும், முட்டையை உடைத்து பார்க்கும் போது, அந்த முட்டையின் வெள்ளை கருவின் நிறம் தெளிவான வெள்ளை நிறமாக காணப்படுமாயின் அது நல்ல முட்டையாகவும், மாறாக வெள்ளைக் கருவின் நிறம் பல வேறுபாடுடன் மங்கி காணப்படுமாயின் அந்த முட்டை கெட்டுப்போன முட்டையாகவும் கருதப்படும். இதேபோல, முட்டையை உடைத்துப் பார்க்கும் போது, மஞ்சள் கரு வட்டமாக இல்லாமல் சிதறியோ அல்லது கலங்கிய நிலையில் காணப்படுமாயின் அந்த முட்டை கெட்டுப்போன முட்டையாகவும் கருதப்படும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: