நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே வேப்ப எண்ணையும் பல நன்மைகளைக் கொண்ட ஓர் அற்புத மரமாக விளங்குகின்றது.
அதிலும் வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் வேப்ப எண்ணெய் பொடுகு, அரிப்பு, சரும அழற்சி, தடிப்பு சரும அழற்சி, பொடுகுத் தொல்லை, முகப்பரு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது வேப்ப எண்ணெயை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையானவை
வேப்ப எண்ணெய் – 1/2 தேக்கரண்டியளவு
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டியளவு
லாவெண்டர் எண்ணெய் – 10 சொட்டுகள்
செய்முறை
முதலில் வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து கொள்ளுங்கள்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலக்கி அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள்.