முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும்.
புரோட்டின்(Protein), நார்சத்து(Fiber), இரும்பு சத்து(Iron), கால்சியம் (Calcium) மற்றும் விட்டமின் ‘C’ (Vitamin C) கொண்டது முசுமுசுக்கை. மூச்சுப் பிரச்சனைக்கு (Respiration problems). முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று.
பயன்கள்(BENEFITS) :
சமையலில் சேர்த்து கொண்டால் சளி(Cold), கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும்.
மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக (Anti-Biotic) முசுமுசுக்கை பயன்படுகிறது.
நோயால் தளர்ந்துபோன உடலை பலமடையச்(Body Strength) செய்யும்.
காய்ச்சலால்(Fever) ஏற்பட்ட சுவையின்மையை போக்கும்.
இளநரை போக்கி எழிலான தொற்றத்தை தரக்கூடியது.
உயர்ரத்த அழுத்தத்தை(Blood Pressure) கட்டுப்படுத்தும்.
காச நோயயை(Tuberculosis) குணபடுத்தும்.
வாந்தியை(Vomit )கட்டுப்படுத்தும். சளி, இருமல், இரைப்பைநோய் குணமாகும்.
ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
நுரையீரல் (Lungs) மற்றும் சுவாசக் கோளாறை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.
சுவாசப்பையில் உண்டாகும் கபத்தை அகற்றும்.
முசுமுசுக்கை தைலம் உடல் சூட்டை (Body Heat) தணிக்கும். கண் எரிச்சல் போக்கும்.
இளநரை, முடி உதிர்வதை (Hair Fall) தடுக்கும்.
முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்யில் வதக்கி பகலில் சோறுடன் பிசைந்து சாப்பிட்டால் ஆஸ்துமா(Asthma) குணமாகும்.
முசுமுசுக்கை சாறில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி காலை மாலை இரு சிட்டிகை உண்டால் இருமல்(Cough), தொண்டை புகைச்சல் சரியாகும்.
முசுமுசுக்கை சாறில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி காலை மாலை இரு சிட்டிகை வீதம் உண்டால் ரத்த அழுத்தம் (Blood Pressure) சீராகும்.
முசுமுசுக்கை கீரையுடன் வெந்தயம் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும்.
10 மி.லி முசுமுசுக்கை சாறு 10 மி.லி நெல்லிச்சாறு இரண்டும் கலந்து குடித்தால் பித்தம் தணியும்.
முசுமுசுக்கைசாறு நல்லெண்ணெய் இரண்டும் சம அளவு எடுத்து காய்ச்சி அந்த எண்ணையை வாரம் இருமுறை தேய்த்துக் குளித்துவர உடல்சூடு, கண் எரிச்சல் சரியாகும்.
மனதில் அமைதியின்மை(Depression), கோபம் (Anger) ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை.
முசுமுசுக்கை இலையின் மருத்துவ பயன்கள் :-
இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது.
மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
அமைதியின்மை போக்கும் இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம்.
இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.
சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும். ஆஸ்துமா குணமாகும் முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
முசுமுசுக்கை தைலம் ;
முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தலைக்குத்தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
முசுமுசுக்கை – மருத்துவ பயன்கள்
முசுமுசுக்கை வேர், பசியை அதிகமாக்கும்; நஞ்சை நீக்கும்; சளியகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும். இலை கோழையகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றைக் குணமாகும்.
முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்புச் சுவைகளும் வெப்பத் தன்மையும் கொண்டது. வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள நான்கு மூலிகைகளுள் முசுமுசுக்கையும் ஒன்றாகும்.
முசுமுசுக்கை நிலம் படிந்த அல்லது ஏறி வளரும் சிறுகொடி. தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முக்கோண வடிவமானவை. 3-5 மடலானவை. பழங்கள், சுணைகள், கொண்டவை. சிவப்பு நிறமானவை.
ஆண், பெண் மலர்கள் தனித் தனியானவை. பூ இதழ்கள் மஞ்சள் நிறமானவை. பழம் காம்பு அற்றது. விதைகள் குழிகளுடன் கூடியவை. இரு குரங்கின் கை, மொசுமொசுக்கை, மாமூலி, ஆயிலேயம் என்கிற மாற்றுப் பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் மிக்கவை.
இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவேளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் ½ தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும். 100 நாள்கள் வரை இவ்வாறு செய்யலாம்.
கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும்.
வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, ½ தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு ½ டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
முசுமுசுக்கை தோசை: 3 பிடி இலைகளை ¼ கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும்.
முசுமுசுக்கை துவையல்: 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமாகும்.