Home thatstamil one india tamil oneindia tamil முகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு !

முகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு !

0
420

பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்ற 105 நாட்கள் கேள்விக்கு சற்றுமுன் விடை கிடைத்துவிட்டது.
கடந்த சில நாட்களாகவே முகின் தான் வின்னர் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதன்படி முகினையே மக்கள் வின்னராக வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். இதனை கமல்ஹாசன் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

முகினுக்கு பிக்பாஸ் வின்னர் டைட்டிலும் ரூ.50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. முகின் பிக்பாஸ் வின்னருக்கு சரியான நபர் என அனைவரும் கருத்து கூறி வருகின்றனர்.

முகின் வின்னர் என்பதால் சாண்டிக்கு அடுத்த இடம் கிடைத்துள்ளது. சாண்டி வின்னருக்கு உண்டான அனைத்து தகுதிகளை கொண்டிருந்தாலும் முகினுக்கு கடைசி இரண்டு நாட்களில் கிடைத்த ஓட்டுக்கள் சாண்டியை பின்னுக்கு தள்ளிவிட்டது. இருப்பினும் சாண்டி, முகின் வெற்றி பெற்றதை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்,

முதல்முறையாக இந்த சீசனில்தான் போட்டி பொறாமையின்றி வின்னருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleபிரபல’ நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி’ காலமானார் !
Next articleவாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது ! 12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம் !