முகாம்களுக்கு அனுப்பப்படும் பிச்சைக்காரர்கள், நகரங்களை அலங்கரிக்க!

0

முகாம்களுக்கு அனுப்பப்படும் பிச்சைக்காரர்கள், நகரங்களை அலங்கரிக்க!

புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அலங்கரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நகரங்களில் இருக்கும் சகல பிச்சைக்காரர்களையும் முகாம் ஒன்றுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே இதற்கு தேவையான ஆலோசனைகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நடமாடுவதால், நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது நகரங்களில் அலங்காரத்திற்கு ஏற்படும் சிக்கலான நிலைமை தொடர்பாக கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து சாதனங்களில் பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட காரணம் எனவும் பேசப்படுகிறது.

பிச்சைக்காரர்கள் ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மகரகமை பொலிஸார் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய இப்படியான யாசகரை ரிதியகம முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் வாழ்ந்த பிச்சைக்கார்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாவீரர் நாளும் பாடலும் – நினைவழியா நிகழ்வுகள்!
Next articleகாலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இவற்றை பூசி குளித்தால் தேமல் நீங்கும் !