முகநூல் மூலம் ஏற்பட்ட காதல்! 15 வயது சிறுமிக்கு நேர்ந்தது என்ன?

0
329

கடந்த ஜனவரி மாதம் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு 15 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலம் ஒரு இளைஞரிடம் நட்பு கொண்டார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு ஓடிச்சென்றனர்.

இந்த நிலையில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை கடந்த ஏழு மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமி தனது தாயின் செல்போன் எண்ணுக்கு பேசியுள்ளார். இந்த விபரத்தை அவரது தாயார் பொலிஸ் அதிகாரிகளிடம் தகவல் கூற உடனடியாக அந்த சிறுமி திருப்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடைய காதலரும் திருப்பூர் பொலிசாரால் மீட்கப்பட்டனர். இந்த விபரம் அறிந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூருக்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறியிருக்கிறார்.

முகநூலால் பல குழந்தைகள் இவ்வாறு காதல் வயப்பட்டு ஏமாந்து விடுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: