மீண்டும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

0
262

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக்கூடாது என தமிழக ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

1991ம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் ராஜீவ் காந்தி உட்பட 15 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்வத்தில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு பரிந்துரையின்படி ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் 7 பேரையும் விடுவிக்க ஆளுநரிடம் பரிந்துரைக்கப்பட்டது.

எனினும், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் ராஜீவ் கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கூடாது என கூறியியுள்ளனர். இதன்மூலம் 7 பேரை விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என தெரிகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: