மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்-பூமிகா.

0

மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்-பூமிகா.

2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பூமிகா. தமிழில் விஜயுடன் பத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

2007-ல் யோகா ஆசிரியர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் சிறிதுகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த பூமிகா தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். முன்னணி நடிகையாக இருந்த பூமிகா தற்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் பூமிகா வில்லி வேடத்துக்கு மாறி இருக்கிறார்.

பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில்வில்லி வேடம் ஏற்றுள்ளார் பூமிகா. அடுத்து தமிழ் படங்களிலும் வில்லியாக நடிக்க பூமிகாவுக்கு வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇவர் பெயரை எனது மகனுக்கு சூட்டியதில் பெருமை படுகிறேன்- சிபிராஜ்
Next articleகனடாவில் துப்பாக்கிச் சூ டு, 16 பேர் ப லி, நடந்தது என்ன?