மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்! எனது தோழியையும் விட்டுவைக்கவில்லை! ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்.!

0
511

தன்னை மட்டுமில்லாமல் தனக்கு நெருக்கமான தோழி ஒருவரையும் நடிகர் ராகவா லாரன்ஸ் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் சுந்தர். சி. ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ராகவா லாரன்ஸிடம் நான் மட்டும் ஏமாறவில்லை. எனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணும் இதே பிரச்சனையை அவரிடம் சந்தித்துள்ளார். அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை எனில், அந்த உண்மையும் வெளியே வரும்” என மிரட்டும் தொனியில் பேசினார்.

மேலும், விளம்பரத்திற்காக நான் இப்படி செய்வதாக லாரன்ஸ் கூறியுள்ளார். தற்போது வெளிநாடு முதல் இந்தியாவின் மூலை முடுக்கிலும் என்னை எல்லோருக்கும் தெரியும். ஆனால், லாரன்ஸ்க்கு அந்த புகழ் இல்லை. நான் விளம்பரத்திற்காக இதை செய்யவில்லை.

மேலும், நான் கூறுவது ஒரு வாரத்திற்கான செய்தி அவ்வளவுதான். ஆனால், இப்படி கூறுவதால் என் எதிர்காலமே கேள்வி குறியாகி விடும் என எனக்கு தெரிந்தும் நான் ஏன் விளம்பரத்திற்கு ஆசைப்படப்போகிறேன். நான் ஏன் இதையெல்லாம் கூறுகிறேன் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் பெண்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே என் வாழ்க்கையை தியாகம் செய்து இதைக் கூறுகிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: