மிரண்டு போன ரசிகர்கள்! கிண்ணத்தை வெல்லும் அணிக்கு எத்தனை மில்லியன் பரிசு தெரியுமா?

0

இன்றிரவு நடைபெற உள்ள உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியை உலகமே ஆவலுடன் உற்றுநோக்கியுள்ளது.

இந்நிலையில், உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு, 2வதாக வரும் அணிக்கு எவ்வளவு பரிசு என்ற தகவல்கள் அச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் வெல்லும் அணிக்கு கிண்ணத்துடன் 29 மில்லியன் பவுண்ட்ஸ் பரிசாக தரப்படும் என ஃபிஃபா தெரிவித்துள்ளது.

2வது இடம் பிடிக்கும் அணி 21 மில்லியன் பவுண்ட்ஸ் பரிசு மழையில் நனைய உள்ளது. 3வது இடம் பிடித்த பெல்ஜியம் அணி 18 மில்லியன் பவுண்ட்ஸ் பரிசு பெற உள்ளது.

4வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 16.5 மில்லியன் பவுண்ட்ஸ் பரிசு கிடைக்கும்.

காலிறுதியில் இடம் பிடித்த அணிகளுக்கு 110 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது. 2வது சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் தலா 82 கோடி ரூபாயும் முதல் சுற்றில் ஆடிய அணிகளுக்கு தலா 55 கோடி ரூபாயும் வழங்கப்படும் என ஃபிஃபா தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 2018 உலகக்கிண்ணம் தொடரில் அனைத்து அணிகளுக்கும் பரிசுத் தொகையாக மட்டும் 302 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கப்பட உள்ளது.

கடந்த முறை பிரேசிலில் உலகக்கிண்ணம் போட்டி நடந்த போது வழங்கப்பட்டதை விட தற்போது பரிசுத்தொகை 40% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

ஃபிஃபா தரும் பரிசுப் பணத்தை 32 நாட்டு அணிகளும் வெவ்வேறு விகிதங்களில் தங்கள் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும். இதன் படி அந்தந்த நாட்டு கால்பந்து சங்கங்கள் தங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்ளும்.

உலகளவில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்திற்கு அடுத்தபடியாக அதிக பரிசுத் தொகை கொண்ட விளையாட்டுத் தொடராக உலகக் கிண்ணம் கால்பந்து கருதப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருத்துவரை கொன்ற மாணவி பரபரப்பு வாக்குமூலம்! வீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றேன்!
Next articleஓவியாவின் புதிய கெட்டப் பார்த்தீர்களா? சிம்பு, ஆரவ்வுடன் அவர் இருக்கும் போட்டோ வைரல்