மினரல் வாட்டரை சுடவைத்துக் குடிக்கலாமா?

0
523

மழைக்காலம் வந்துவிட்டாலே காய்ச்சல், ஜலதோஷம், தலைபாரம், தலைவலி என்று பலருக்கும் பலவிதமான தொல்லைகள்.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், தொண்டையில் வறட்சி!

தாகத்துக்கு சுடுதண்ணீர் குடிப்பதா, மினரல் வாட்டர் குடிப்பதா, சாதாரண தண்ணீரைக் குடிப்பதா? அந்த மினரல் வாட்டரை சுடவைத்துக் குடிக்கலாமா?

ஆனால், சுத்திகரிக்கப்பட்டு உப்புகள், தாது உப்புகள் சேர்க்கப்பட்ட மினரல் வாட்டரை சுடவைத்தால், அதில் இருக்கும் மினரல்ஸ் எல்லாம் போய்விடும் என்கிறார்களே? என்று பல குழப்பங்கள்…

‘‘உண்மையில் சில நிறுவனங்களைத் தவிர, பெரும்பாலும் ஆர்.ஓ.ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர்தான் கிடைக்கிறது.

அதாவது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.

இந்த நீரில் அளவுக்கதிகமாக இருக்கிற பாஸ்பரஸ் போன்ற உப்புகள், சுத்திகரிக்கப்படும்போது வெளியேறிவிடும்.

மற்றபடி இதுவும் கிட்டத்தட்ட சாதாரண குடிநீர் போன்றதுதான். இதை நாம் காய்ச்சி சுடவைத்துக் குடிப்பதில் தவறில்லை.

இதனால் எந்தச் சத்துகளும் போய்விடாது.

மீண்டும் மீண்டும் சுடவைத்துக் குடித்தாலும் தவறில்லை. தண்ணீர் ஒரு மீடியம். வெப்பம், காற்று ஆகியவை அதைப் பாதிக்கும்.

அதனால், அதில் பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கிவிடும். ஒருமுறை பாட்டிலையோ, கேனையோ திறந்துவிட்டால், 24 மணி நேரத்துக்குள் அதைப் பயன்படுத்தி விடவேண்டும்.

மேலை நாடுகளில் சுத்தமான அருவிகளில் கிடைக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து, அந்தத் தண்ணீரில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாது உப்புகளை (மினரல்ஸ்) உரிய விகிதத்தில் கலந்து விற்பனை செய்கிறார்கள்.

அதுதான் உண்மையான மினரல் வாட்டர். அந்த மினரல் வாட்டரைக் காய்ச்சக் கூடாது. அப்படிக் காய்ச்சினால், அதில் உள்ள மினரல்ஸ் பயனற்றுப் போய்விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: