மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0
283

மிதுனம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

உங்களின் ராசிக்கு 7-வது வீட்டில் இருந்து கொண்டு அடுக்கடுக்கான தோல்விகளையும், நஷ்டங்களையும், தனிமையையும் தந்த சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசியில் ஆட்சி பலம் பெற்று அமர்வதால் இனி நல்லதே நடக்கும். அனைத்துச் செயலையும் முழுமையாக முடிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார். உங்கள் வேலையையும் இழுத்துப் போட்டுச்செய்வார். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு நிச்சயம். புதிய வாய்ப்புகளால் பரபரப்புடன் காணப்படுவீர்கள். சம்பள பாக்கிகள் கைக்கு வரும். இந்த சனிப்பெயர்ச்சி சகிப்புத் தன்மையையும் பணப்புழக்கத்தையும் தருவதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: