மிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்தா, தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
623

மிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்தா, தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் – ஐ மிக நீண்ட நேரம் அணிந்திருந்தமையால் சுய நினைவை இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, டெல்லியில் இருந்து குறித்த தொழிலதிபர் புதிய காரில் நண்பர்களுடன் எங்கேயும் நிறுத்தாமல் இடைவிடாது 8 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்துள்ளார். சில மணி நேரத்தில் காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளார்.

எனினும், அதைப்பற்றி எதையும் சிந்திக்காமல் மறுநாளில் சில மருந்துகளை தடவிவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுள்ளார். அங்கு சென்ற சில நிமிடங்களில், சுய நினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட்டால் அவரது உடலில் வழக்கமான ரத்த ஓட்டம் தடை பட்டுள்ளது. ரத்த ஓட்டம் தடைபட்டதன் எதிர்வினையாக இதயத்திலும் திடீர் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரின் ரத்த அழுத்தம் வீழ்ந்து, இதய துடிப்பும் குறைந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக 6 நாள் சிகிச்சைக்குப் பின்னர் தொழிலதிபர் வீடு திரும்பியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: