சாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்தால், நினைத்த காரியம் விரைவில் நடக்கும்!

0
8107

வியாழக் கிழமைகளில் சாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்து வேண்டினால், நாம் நினைத்த காரியம் விரைவில் நடக்கும் என நம்பப்படுகிறது.

ஏனெனில் வியாழக்கிழமையானது சாய் பாபாவிற்கு மிகவும் உரிய நாளாக கருதப்படுகிறது.

அந்த வகையில் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

பசலைக்கீரை

வியாழக் கிழமையில் சாய் பாபாவின் பக்தர்கள் பசலைக் கீரையைப் படைத்து வணங்குகிறார்கள். ஏனெனில் காய்கறி வகையில் பசலைக் கீரை சாய் பாபாவிற்கு பிடித்த உணவாக கருதப்படுகிறது.

அல்வா

சாய் பாபாவிற்கு அல்வா பிடிக்கும் என்பதால், ரவையால் ஆன அல்வாவை வியாழக் கிழமைகளில் சாய் பாபாவிற்கு படைத்து வணங்குகிறார்கள்.

கூழ்

சாய் பாபாவிற்கு மிகவும் விருப்பமான உணவு கூழ் ஆகும். இந்த கூழை வியாழக் கிழமைகளில் செய்து, அதை சாய் பாபாவிற்குப் படைத்தால், நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும் என்பது ஐதீகம்.

தேங்காய்

தேங்காய் அனைத்து மத செயல்பாடுகளிலும் முக்கிய பொருளாக விளங்குகிறது. எனவே சாய் பாபாவிற்கும் இது மிகவும் பிடித்த பொருளாக உள்ளது.

பூக்கள்

சாய் பாபாவிற்கு பூக்கள் வைத்து படைக்கும் போது. குறிப்பாக மஞ்சள் நிறம் கொண்ட சாமந்தி அல்லது சூரியகாந்தி மாலைகள் வைத்து படைக்க வேண்டும்.

பழங்கள்

சாய் பாபாவிற்கு பழங்களில் ஆரஞ்சு பழம் மிகவும் பிடிக்குமாம். இதனால் வியாழக் கிழமைகளில் ஆரஞ்சு பழத்தை சாய் பாபாவிற்கு வைத்து படைத்தால், நாம் நினைக்கும் செயல்கள் நிறைவேறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: