மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகவ்–பிரீத்தாவின் மகள் இவள் தான் !பார்த்திருக்கீங்களா!

0

அவங்களோட மகளை பார்த்துள்ளீர்களா! பிரபல சின்னத்திரை ஜோடிகள் ராகவ் ப்ரீத்தாவை ஞாபகம் இருக்க.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகவ்–பிரீத்தாவை ஞாபகம் இருக்குங்களா??? இவர்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. .ராகவின் முழு பெயர் வெங்கட்ராகவன் ரங்கநாதன். இதை முழு ராகவ் என்று சினிமா துறையில் வைத்துக் கொண்டார். மேலும்,இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர்,இயக்குனர் என பல முகங்களைக் கொண்டு உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்றும் சொல்லலாம். ஏன் என்றால் இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றியும் பெற்று உள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் ராகவ் முதலில் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்தும்,நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தான் இருந்தார்.

பின் தன் மனைவியுடன் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், இவர் முதன்முதலாக தன்னுடைய நடன திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸும் மூலம் தான் வெளிப்படுத்தினார். அதோடு “ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், மானாட மயிலாட” போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று உள்ளார். அதோடு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவர் டான்சில் மட்டும் டாப் இல்லைங்க படிப்பிலேயும் டாப் தாங்க. இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங்கில் கோல்ட் மெடல் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு சார்லஸ் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘நஞ்சிபுரம்’ படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஆனால், இவர் இதற்கு முன்னரே ‘நீ ரொம்ப அழகா இருக்க, ஜெர்ரி, சத்தம் போடாதே, சிலம்பாட்டம், எந்திரன், வேலாயுதம், நான் ராஜாவாகப் போகிறேன், கல்யாண சமையல் சாதம் என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். புலம்பி தள்ளும் யோகி பாபு அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகர் ராகவ் “டிக்கெட்” என்ற படத்தை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படம் இங்கிலாந்து நாட்டில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து நாட்டில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றது. மேலும், நடிகர் ராகவ் தன் உடன் பணி புரிந்த நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பெயர் ப்ரீத்தா. மேலும்,ராகவ்,ப்ரீத்தா இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேலும்,ப்ரீத்தாவை பற்றி சொல்லனும்னா இவர் நிறைய சமையல் குறிப்பு, ஆன்மீகம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல டிவி தொடர்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் தன் கணவர் ராகவ் உடன் இணைந்து ஜோடி நம்பர்-1, மானாடா மயிலாட போன்ற பல நிகழ்ச்சிகளில் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார். மேலும், ப்ரீத்தா “மோகினி ஆட்டம், பரதநாட்டியம்” ஆகிய நடனத்தில் சிறந்து விளங்கியவர். மேலும், இவர் சினிமா துறையில் அறிமுகமானது மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘டும் டும் டும்’ படத்தில் தான். அதுமட்டுமில்லாமல் ப்ரீத்தாவுக்கும், ராகவ் போலவே நடனத்தில் அதிக ஆர்வம். அதனால் இவர் கர்ப்பமாக இருக்கும் போது கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினாராம். மேலும்,இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் உள்ளது. அந்த பெண்ணோட பெயர் தனிஷா.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 25.11.2019 திங்கட்கிழமை !
Next articleவைரல்லன‌ புகைப்படங்கள், படுக்கையில் இருந்த படி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த்!