மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும், நடிகராகவும் திகழ்ந்த மனோ கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்!

0

பிரபல ரிவியில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராகவும், நடிகராகவும் திகழ்ந்த மனோ கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த தீபாவளி அன்று மனைவி லிவியாவுடன் அம்பத்தூரில் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென சென்டர் மீடியனின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மனோ சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அவரது மனைவி ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார். இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

மனோ புழல் திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானது மட்டுமன்றி பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மேடை நிகழ்ச்சிகள் நடத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுர்ஜித்தின் உடல் சற்றுமுன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.தம்பி மறைவால் செய்வதறியாது தவிக்கும் சுர்ஜித் அண்ணன் மனதை உலுக்கும் புகைப்படம்!
Next articleநெருக்கமான காட்சி, ரொமான்ஸ், ஹாட்டான ஆட்டம் என கலக்கிய இளம் நடிகை! லட்சம் கண்களை கவர்ந்த வீடியோ !