Home thatstamil one india tamil oneindia tamil மாணவர்கள் முன்னிலையில் நடந்த கொடூரம்! பாடம் எடுத்த ஆசிரியர்!

மாணவர்கள் முன்னிலையில் நடந்த கொடூரம்! பாடம் எடுத்த ஆசிரியர்!

0
421

பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியரை, 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் புறநகரான அக்ரஹாரா தசாரஹல்லி என்கிற இடத்தில் இருக்கும் ஹாவனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் 60 வயதாகும் ரங்கநாதன். நேற்று அவர் 10வது படிக்கும் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, 6 பேர் கொண்ட மர்மக் கும்பல், ரங்கநாதனை சரமாரியாக தாக்கிக் கொன்றுள்ளது.

ரங்கநாதனை தாக்கிவிட்டு, மர்மக் கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து துப்பு கிடைத்ததின் பேரில், கும்பலைச் சேர்ந்த ஒருவரை, பெங்களூருவின் மஹாலக்‌ஷ்மி லே-அவுட் பகுதியிலிருந்து கைது செய்துள்ளது பொலிஸ்.

ஹாவனூர் பள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நிலப் பிரச்னைக்காக இந்த கொடூர செயல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் சந்தேகிக்கிறது. தொடர்ந்து காவல் துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

Previous articleதன் அழகிய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்! அடுத்து நடந்த விபரீதம்?
Next articleபிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியை தந்திரமாக பயன்படுத்திய‌ விஜிக்கு அடித்த அதிர்ஷ்டம்!