மஹிந்த பக்கம் தாவினார் தமிழ் எம்.பி! கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சற்று முன்னர் அமைச்சு பதவி!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சற்று முன்னர் கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.நாவின்ன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article03.11.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 17, சனிக்கிழமை!
Next articleரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி! நெருக்கடி ஏற்பட்டால் தோள்கொடுக்க முடிவு!