மலேசியாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்

0
491

60 ஆண்டுகளுக்கு பிறகு: மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பரிசான் தேசிய கட்சிக்கும், மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மலேசியாவில் உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.முதலில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களிலும், மஹாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

இறுதியில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் மஹாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்துள்ளது. இதன் மூலம் மலேசியா வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியினர் ஆட்சி அமைக்க உள்ளனர்.

Previous articleஇன்று! எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கும்
Next articleவடக்கு- கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!