மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ் பெண் மீட்பு: கண்ணீர் பேட்டி!

0
408

மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண் திருச்சிக்கு மீட்டு கொண்டு வரப்பட்ட நிலையில் விமானநிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கமரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பானுப்பிரியா (25).

கணவரை இழந்த பானுப்பிரியாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஹொட்டலில் வேலை செய்து வந்தார்.

அப்போது பானுப்பிரியாவுக்கு ஒரு பெண் அறிமுகமான நிலையில், மலேசியாவில் உள்ள ஹொட்டலில் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார்.

ஆனால் மலேசியாவில் பாலியல் தொழில் செய்வதற்காக சீனாவை சேர்ந்த ஒருவரிடம் பானுப்பிரியா விற்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து எப்படியோ தப்பித்த பானுப்பிரியா இந்திய தூதரகத்தில் புகார் செய்ததோடு, தனது தாய் பங்கஜவல்லிக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பங்கஜவல்லி தஞ்சாவூர் பொலிசில் புகார் அளித்த நிலையில், மலேசிய தமிழர்கள் மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் மீட்கப்பட்ட பானுப்பிரியா தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்றிரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பானுப்பிரியா கண்ணீர் மலக பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ஹொட்டல் வேலை என பொய்யாக கூறி அந்த பெண் என்னை 6 ஆயிரம் வெள்ளிக்கு பாலியல் தொழில் செய்வதற்கு விற்று விட்டார்.

என்னை போல் பல பெண்கள் மலேசியாவில் விபசாரத்திற்காக விற்கப்பட்டு உள்ளனர். மலேசியாவில் 5 மாத காலம் நான் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்.

இதற்கு காரணமான அந்த பெண் மீது விரைவில் பொலிசில் புகார் செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: