ஆண்கள் பெண்மை தன்மையுடைவர்களாக மாறும் நிலை மற்றும் மலட்டுத்தன்மை உண்டாகும்! இனிமேல் இதை பயன்படுத்தாதீங்க!

0
3915

ஆண்கள் பெண்மை தன்மையுடைவர்களாக மாறும் நிலை மற்றும் மலட்டுத்தன்மை உண்டாகும்! இனிமேல் இதை பயன்படுத்தாதீங்க!

பிளாஸ்டிக் பொருட்களை உணவு அருந்துவதற்கு பயன்படுத்தினால், குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் ஆண்கள் பெண்மை தன்மையுடைவர்களாக மாறும் நிலை மற்றும் மலட்டுத்தன்மை உண்டாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் பொது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தாள்கள் தடை செய்யப்படுவதாகவும் கூறியிருந்தனர்.

அதற்கு பதிலாக வாழை இழைகள், மர மட்டையில் செய்யப்பட்ட தட்டுக்கள், தாமரை இலைகள், கண்ணாடி, பீங்கான், உலோகத் தட்டு குவளைகள், தேக்கு இலைகள், துணிப்பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரங்களின் பாதுகாப்பு கருதி பேப்பர் கப்புகளும் தடை செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

உணவுப் பொருட்களை சாப்பிடவும், பரிமாறவும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் உள்ள, ஆண்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களைப் போன்ற வேதியியல் அமைப்பை கொண்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்

மேலும் இதனால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, நுரையீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நிலம், நீர் போன்றவற்றை மாசுபடுத்தும் பொருளாக பிளாஸ்டிக் இருந்துவருகிறது. எனவே பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: