மருத்துவர்களிடம் இந்த விடயத்தை மாத்திரம் மறைக்காதீங்க! மறைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

0
442

ஒரு சில சூழ்நிலைகளில் நம்மை பற்றிய விஷயங்களை மறைத்தே கூறுவோம்.

அவ்வாறு செய்வதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்க தான் செய்யும். ஆனால், இது போன்ற செயல்கள் எல்லா இடங்களிலும் ஏற்றதாக இருக்குமா? என்பதே கேள்வி.

பல நேரங்களில் நாம் மறைக்கின்ற உண்மைகள் நம்மை பாதிக்க கூடும். குறிப்பாக மருத்துவரை சந்திக்க செல்லும் போது இது போன்ற நிலை உண்டாக கூடும்.

எந்தெந்த விஷயங்களை மருத்துவர்களிடம் மறைக்கவே கூடாது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

கெட்ட பழக்கங்கள்
உங்களுக்கு ஏதேனும் பழக்க வழக்கங்கள் உள்ளதா என்று மருத்துவர் கேட்டால் அதை மறுக்காமல் உங்களுக்கு உள்ள பழக்க வழக்கங்களை கூறி விடுங்கள்.

இது உங்களின் ஆரோக்கியத்தை பற்றி அவர்கள் புரிந்து கொள்வதற்காக கேட்கும் கேள்வியே. குறிப்பாக மது, புகை, போன்ற பழக்கங்கள் இருந்தால் முழுவதுமாக விட்டு விடுங்கள்.

வயது
மருத்துவரிடம் செல்லும் போது உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும்.

அதாவது, உங்கள் வயது என்னவென்று கேட்பார்கள். அதற்கு அவசியம் நீங்கள் சரியான வயதை தான் சொல்லியாக வேண்டும். வயதை பிறரிடம் சொல்ல தயங்கும் பலர் இதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

மருந்துகள்
இதற்கு முன் நீங்கள் ஏதேனும் மருந்துகள் எடுத்து கொள்கிறீர்கள் என்றால் அதை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவரிடம் கூறியாக வேண்டும். மேலும், சாதரணமாக மருந்து கடைகளில் வாங்கும் மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் அதை பற்றியும் தெளிவாக சொல்ல வேண்டும்.

மாற்றங்கள்
உடலில் ஏதேனும் மாற்றங்கள் சமீப காலமாக ஏற்பட்டால் அதையும் மருத்துவரிடம் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக உங்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்பட கூடிய மாற்றங்களை தெரிவிப்பது நல்லது. இல்லையேல் அதனால் பலவித பாதிப்புகள் உண்டாக கூடும்.

உணவு முறை
எத்தகைய உணவு முறையை நீங்கள் கடைபிடிக்கிறீர்கள் என்பதை பற்றி நிச்சயம் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். சிலர் இது போன்ற தகவல்களை கூச்சப்பட்டு கொண்டு சொல்லாமல் விட்டுவிடுவார். தினமும் சாப்பிட கூடிய உணவு முறையை தெளிவாக சொல்ல வேண்டியது அவசியம்.

அறுவை சிகிச்சை
உங்களுக்கு ஏற்கனவே ஏதாவது அறுவை சிகிச்சை நடந்திருந்தால் அதையும் மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. மேலும், அது எப்படிப்பட்ட அறுவை சிகிச்சை போன்ற தகவல்கள் கொண்ட ரிப்போர்ட்டை மருத்துவரிடம் மறக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.

தவிர்த்தல்
மருத்துவரிடம் மட்டும் ஒரு போதும் பொய் சொல்ல கூடாது. காரணம், நீங்கள் சொல்லும் ஒரு பொய் கூட உங்களின் உயிருக்கே அபாயத்தை தந்து விடும். உங்களின் வயது முதல் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் வரை மருத்துவரிடம் வெளிப்படுத்துவது சிறந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இடத்தில் கைவைத்து அழுத்தினால் என்னவாகும்? ஒரே புகைப்படத்தில் பல ரகசியம்!
Next articleசிவப்பு முட்டைகோஸை சமைக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க..!