மருத்துவமனை சென்று கலைஞரை பார்க்காமலேயே வெளியில் வந்த ரஜினிகாந்த்!

0
258

டேராடூனில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். நேராக அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கலைஞரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்துள்ளார்.

பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். “இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அவர் உடல்நிலை குணைமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அவர் தூங்கிக்கொண்டிருந்தார், அதனால் பார்க்கமுடியவில்லை” என்று கூறினார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: