Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam மரணச்சடங்கில் சிரித்த உறவுகள்!

மரணச்சடங்கில் சிரித்த உறவுகள்!

0
1739

அயர்லாந்தின் லீனெஸ்டர் மாகாணத்தில் உள்ள கில்கென்னி எனும் நகரைச் சேர்ந்தவர் தான் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான ஷே பிராட்லி.

கடந்த 12 ஆம் திகதி உடல்நலக் குறைவினால் காலாமானார்.

இவர் இறப்பதற்கு முன் தன் உறவினர்களிடம், தனது உடலை அடக்கம் செய்யும்போது, யாருமே அழக்கூடாது என்றும், வாய்விட்டு நன்றாக சிரிக்க மகிழ வேண்டும் எனவும், இதுதான் தன்னுடைய கடைசி ஆசை என்றும் கூறியுள்ளாராம்.

அதுமட்டுமா? தனது இறுதிச்சடங்கில் உறவினர்களை சிரிக்கவைப்பதற்கான ஏற்பாட்டையும் அவர் செய்துள்ளார். அதன்படி அவர் இறப்பதற்கு முன்பு குரல்ப் பதிவொன்றையும் தனது மகளிடம் கொடுத்துள்ளார்.

இறுதிச்சடங்கின் போது, அவரது சவக்குழிக்கு அருகில் ஒலிப்பெருக்கி மூலம் அவர் குரல்ப்பதிவை மகள் ஒலிபரப்பியுள்ளார்.

அதில், “நான் எங்கே இருக்கிறேன்? இது மிகவும் இருட்டாக இருக்கிறது. என்னை வெளியே விடுங்கள்” என கூறியுள்ளார்.

இதை கேட்டு அங்கிருந்த எல்லோருமே சிரித்து மகிழ்ச்சியாக அவரின் உடலை நல்லடக்கம் செய்துள்ளனர்.

Previous article1 கோடியே 99 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவான தங்கச் செருப்பு!
Next articleயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு !