மனைவி செல்போனுக்கு 10 நாட்களாக வந்த குறுஞ்செய்தி! அதை பார்த்தபோது அதிர்ந்த கணவன்! பின்னர் செய்த செயல்!

0
348

தமிழகத்தில் தன் மனைவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை சாமர்த்தியமாக கணவர் சிக்க வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது மனைவிக்காக துணிக்கடை ஒன்றை அமைத்து தந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துணிக்கடையில் சுப்ரமணியன் மனைவி பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் ராம்பிரபு (37) என்பவர் துணி வாங்கியதாக தெரிகிறது.

அப்போது ராம்பிரபு, சுப்ரமணியின் மனைவியிடம் துணி வாங்குவது போன்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசியுள்ளார். மேலும் கடையின் பெயர் பலகையில் உள்ள அவரின் செல்போன் எண்ணையும் குறித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

பின்னர் ராம்பிரபு சுப்ரமணியின் மனைவியின் செல்போன் எண்ணிற்கு முதலில் குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இந்த விடயம் 10 நாட்களாக தொடர்ந்த நிலையில் அதிர்ச்சிக்குள்ளான அந்தப் பெண், கணவர் சுப்பிரமணியனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த குறுஞ்செய்திகளை பார்த்த சுப்ரமணியன் அதிர்ந்து போய் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், பொலிசார் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் ராம்பிரபுவை கையும், களவுமாக பிடிக்க நினைத்து, அதற்காக திட்டம் ஒன்றையும் தீட்டினார்.

அதன்படி ராம்பிரபுவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட சுப்பிரமணியன், பெண் குரலில் ஆசையாக பேசி, கடைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனால் ராம்பிரபு ஏமாற்றமடைந்து சுப்பிரமணியனின் மனைவியை பார்க்க துணிக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ராம்பிரபு சுப்பிரமணியனிடம் வசமாக சிக்கியுள்ளார். பின்னர் சுப்பிரமணியன் பொதுமக்கள் உதவியுடன் ராம்பிரபுவை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியான அடித்த பின் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபூவையார் கொடுத்த இன்ப அதிர்ச்சி! எப்போவும் துறுதுறுன்னு இருக்கும் டிடியா இப்படி!
Next articleஇருட்டான பகுதியிலிருந்து கேட்ட குழந்தையின் அழுகுரல் சத்தம்!