மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலை.

0
774

மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலை.

மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கணவன் ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை மாவட்டம் கல்லேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ரத்னசேகர எனும் பெயர்கொண்ட நாற்பத்தியெட்டு வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் கணவரின் சொல்லையும் மீறி பெண் ஒருவர் வெளி நாடு ஒன்றுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்துபோன கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதனால் குறித்த பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து குறித்த பெண்ணின் சகோதரர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

”உயிரிழந்தவர் எனது அக்கா லலனி டில்ருக்‌ஷியின் கணவராவார். அவர்கள் இருவருக்கும் 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

எனது அக்கா இதற்கு முன்னர் பல ஆண்டுகள் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்த போது அத்தான் அதை எதிர்த்துள்ளார்.

அக்கா விடுவதாக இல்லை, இதனால் அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விஷம் அருந்தியிருந்த நிலையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் அத்தானின் எதிர்ப்பையும் மீறி அக்கா வெளி நாட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றைய தினமே மாலை 4 மணியளவில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கா சென்ற மனக்கவலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” என்று அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தூக்கிட்டு கொண்டமையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் நரம்பு மண்டலச் சிதைவும் தான் மரணத்துக்கான காரணம் என்பதை சட்ட வைத்திய அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: