மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை. காரணம் Face Book, Whats App

0

மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை. காரணம் Face Book, Whats App

தமிழகத்தின் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ்(31). கோவையில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணியாற்றி வரும், இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேகலா(25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுகு பிரியதர்ஷனி என்ற 7 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேகலா அவரது பெற்றோர் வீட்டில் தனது மகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை இருவரும் தம்மம்பட்டி மண்கரடு மலை அடிவாரத்தில் இருக்கும் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று கணேஷ் மேகலாவின் கழுத்தை கத்தியால் அறுத்ததால், அவர் அந்த இடத்திலே துடி துடித்து இறந்தார்.

அதன் பின் இது தொடர்பான தகவல் பொலிசாருக்கு தெரியவந்தால், பொலிசாருக்கு அப்பகுதிக்கு வந்தவுடன் கணேஷ் அவர்களிடம் சரண் அடைந்தார்.

கணேஷ் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்தோம்.

இருந்த போதிலும் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வோம். குடும்ப செலவுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பேன். அவள் நர்சிங் படிப்பதற்கு கடந்த 2 வருடமாக நான் பணம் கொடுத்து உதவினேன்.

இதைத் தொடர்ந்து அவளிடம் பேச வேண்டும் என்று நான் அவளை அங்கு அழைத்தேன். அப்போது அவளது செல்போனை வாங்கி பார்த்ததில் அவளுடைய வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வேறு வாலிபர் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததால், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவளிடம் அறிவுரை கூறினேன்.

ஆனால் அவளோ நான் அப்படித்தான் இருப்பேன் என்றும், என் இஷ்டப்படிதான் வாழ்வேன் என்று கூறியதால், தனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் மேகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன், அதன் பின்னர் வாழ்க்கையே நாசமாகி விட்டதே என்று கதறி அழுததாக கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுனிதமான கோவிலை கூட இப்படி ஆக்கி விட்டார்கள்!! எங்கே செல்கிறது ஆண்மீகம்!!
Next articleதற்போது அதிகமாக மனித முகத்தில் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளால் பரபரப்பு!!