மனம் திறந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி! எனக்கு செய்த துரோகம் தான் இதுக்கு காரணம்!

0
405

சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க உதவிய சண்முகப்பிரியா என்ற பெண் குறித்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பேசியுள்ளார்.

வீரப்பனைப் பிடிக்க, காவல் துறைக்குத் தான் உதவியதற்கு அரசு அறிவித்திருந்த சன்மானம் 14 ஆண்டுகளாகியும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார், கோவையைச் சேர்ந்த சண்முகப்ரியா.

இவர், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி, வீரப்பன் குறித்த தகவல்களைச் சேகரித்துத் தந்தவர் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், சண்முகப்ரியா மூலமாக என் கணவரைப் பிடிக்கத் திட்டம் போட்டாங்க.

சண்முகப்பிரியா என்னோடு நல்லா பழகினாங்க. அவங்க குடும்பப் பிரச்னைகளை எல்லாம் சொன்னாங்க. அதுக்காக, ஒருசில தடவை அவங்களோடு உதவிக்குப் போயிருக்கேன்.

அவங்க வீட்டில் அப்போ தங்கியிருந்த போது தான் அவங்களோட திட்டம் தெரிந்தது.

அங்கிருந்து வெளியேறிடலாம்னு நினைச்சப்போ, வீட்டுக்குள்ளே அடச்சிவெச்சு, உனக்காக 50,000 ரூபா செலவு பண்ணியிருக்கோம். அதைத் திருப்பிக் கொடுங்க என டார்ச்சர் பண்ணாங்க. நகைகளைக் கொடுத்த பிறகு தான் வரமுடிந்தது.

தற்போது அவங்களுக்கு அரசு பணம் தரலை என சொல்றாங்க, எனக்குச் செய்த துரோகம் தான் சண்முகப்பிரியாவை இப்படிப் புலம்ப வைத்துள்ளது.

இதோடு இல்லாமல் இன்னும் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பாங்க என ஆதங்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: