மதம் மாறிய நடிகர் டி.ராஜேந்தரின் மகன்! பரபரப்பை ஏற்படுத்திய காட்சி!

0

தமிழ் சினிமாவில் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை இயக்கி, பல வெற்றி படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர்.

மேலும், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர். இவரின் அடுக்குமொழி பேச்சுக்கு தற்போது வரை பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவருடைய இளைய மகன், குறளரசன் திடீர் என முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளது தமழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர், குழந்தை நட்சத்திரமாக, சொன்னால் தான் காதலா, உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதே போல் சிம்பு நடித்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ப ஆளு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது திரையுலகில் இருந்து சற்று விலகியே இருக்கும் இவர், தன்னுடைய தாய் தந்தை முன்னிலையில் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன்! ஊரே சோகத்தில்!
Next articleஇரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையா! யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா!