மணமகனை கொலை செய்து ஆற்றில் வீசிச்சென்ற பெண் வீட்டார்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

0

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர், 9 பேர் கொண்ட பெண் வீட்டாரால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்று கரையில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது மணலூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்கிற இளைஞர் இரண்டு நாட்களாக மாயமாகியிருப்பது தெரியவந்தது.

அதனை வைத்து விசாரணை மேற்கொள்கையில், இறந்துகிடப்பது பிரசாந்த் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் வேலை செய்துவந்த பிரசாந்த், பக்கத்து ஊரை சேர்ந்த பிளஸ் 2 முடித்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி பிரசாந்தின் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பிய பிரசாந்த், ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பின்னர் சமயபுரத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி வந்துள்ளனர். இதற்கிடையில் அந்த சிறுமி, திருமணம் செய்துகொண்டது குறித்து தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.

திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக அவருடைய தாய் கூறியதால், தங்களுடைய இருப்பிடத்தை பற்றி அந்த சிறுமி கூறியுள்ளார். உடனே அங்கு விரைந்த 9 பேர் கொண்ட கும்பல், காதல் ஜோடியை காரில் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். வழியில் உறவினர் வீட்டில் அந்த பெண்ணை இறக்கி விட்ட கும்பல், பிரசாந்தை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு வெண்ணாற்று பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சத்தம் வெளியில் கேட்ககூடாது என்பதற்காக இளைஞரின் வாயில் துணியை திணித்து, சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் படுகொலை செய்து வீசிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து ஆற்காட்டை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை தமிழரை மணந்து கனடாவில் வசிக்கும் நடிகை ரம்பாவின் தற்போதைய நிலை என்ன! வெளியான கலக்கல் புகைப்படங்கள்!
Next articleஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள்!