மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.

0
388

மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக வறுமையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இரு பெரும் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் அனைத்துத்துறைகளும் முடங்கிக் கிடைக்கின்றது. அந்த வகையில் வாகனங்கள் சார்ந்த துறைகளும் முடங்கியுள்ளது.அப்படி இருந்தும் உதவ முன்வந்திருக்கின்றன.

இந்தவகையில், வறுமையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஹூண்டாய் மற்றும் டைம்ளர் ஆகிய இரு நிறுவனங்களும் உதவ முன் வந்திருக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிலை விவரிக்க முடியாத அளவில் சிக்கலில் சிக்கியிருக்கின்றது. இருப்பினும், அவை கொரோனாவிற்கு எதிரான போரில் பெரும் உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் உதவி இன்றியமையாததாக மாறியிருக்கின்றது.

சென்னையைச் சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மளிகைப் பொருட்கள் அடங்கிய 1,000 பொட்டலங்களைத் தயார்படுத்தியுள்ளது. இவற்றின் உதவியானது இன்றியமையாததாக மாறியிருக்கின்றது எனலாம்.

By: Tamilpiththan

Previous articleNews English News Paper / News English Epaper News English Online Newspaper Sri Lankan
Next articleஇயக்குனர் ராஜமவுலியின் பிரமாண்டமான புதிய படம்!