மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டோனி: வைரலாகும் வீடியோ!

0

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி வென்ற போது டோனியின் ரியாக்ஷன் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

நேற்று மும்பைக்கும், சென்னைக்கும் இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய பிராவோ ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

கடைசி நேரத்தின் போது வெற்றியை கொண்டாடிய டோனி, சந்தோஷத்தில் புன்னகைத்தார், முதன்முறையாக டோனியின் இந்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.

எப்போதும் சமநிலையில் இருக்கும் டோனி, நேற்று ஆட்டமிழந்ததும் சோகமானார், அடுத்தடுத்த ஹர்பஜன், ஜடேஜா ஆட்டமிழக்க சோகம் அதிகமானது.

கடைசி மூன்று ஓவர்களில் பதட்டமாக இருந்த டோனி, பிராவோ சிக்ஸர் அடிக்கும் போது இவரும் சிக்ஸர் அடிப்பது போன்று கையசைத்துக் கொண்டிருந்தார்.

வெற்றி பெற்றதும் கைதட்டி புன்னகையுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய டோனி, பிராவோவை கட்டிப்பிடித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின், முதல் போட்டியிலேயே சென்னை அணி வென்றிருப்பது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமரத்தின் உச்சியில் வீடுகட்டி வசித்து வரும் குடும்பம்! ஏன் தெரியுமா? வைரல் வீடியோ!
Next articleஓடும் ரயிலில் பெண் பாலியல் பலாத்காரம்: காப்பாற்றாமல் பயணிகள் செய்த இழிசெயல்!