மகள் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்: வைரலாகும் புகைப்படங்கள்!

0
467

பிரபல நடிகர் மிலிந்த் சோமன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அது சம்மந்தமான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தமிழில் பையா, அலெக்ஸ்பாண்டியன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மிலிந்த் சோமன் (52).

இவர் கடந்த 2006-ல் பிரான்ஞ் நடிகை மைலின் ஜம்பானோய் என்பவரை திருமணம் செய்த நிலையில் 2009-ல் விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் விமான பணிப்பெண்ணான அன்கிதா கொன்வாரை மிலிந்த் இரவு விடுதியில் சந்தித்த நிலையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து மகாராஷ்டிராவின் அலிபவுக் நகரில் காதலர்களுக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.

இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மலிந்த் வெள்ளை நிற பைஜாமா சட்டையிலும், அன்கிதா மஞ்சள் நிற ஆடையிலும் ஜொலிக்கின்றனர்.

திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: