மகளை 15 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்: மூன்று குழந்தைகள் பெற்ற பரிதாபம்!

0
306

அமெரிக்காவில் வளர்ப்பு மகளை பெற்றோர் 15 ஆண்டுகள் பாலியல் அடிமையாக வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசுபியோ கேஸ்டிலோ – லவுரா தம்பதி பல ஆண்டுகளுக்கு முன்னர் அபிகல் அல்வரடோ என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள்.

தொடக்கத்தில் அபிகல்லை நன்றாக பார்த்து கொண்ட பெற்றோர் பின்னர் அவருக்கு பாலியல் ரீதியாக துன்பம் கொடுத்தார்கள்.

இருவரும் சேர்ந்து அபிகல்லை கடந்த 15 ஆண்டுகளாக பலமுறை துஷ்பிரோகம் செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த 15 வருட காலக்கட்டத்தில் மூன்று முறை கருத்தரித்து மூன்று குழந்தைகளை அபிகல் பெற்றெடுத்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு வீட்டிலிருந்து தப்பித்த அபிகல் பொலிசாரிடம் சென்று தனது பெற்றோர் குறித்து புகாரளித்துள்ளார்.

தற்போது 28 வயதாகும் அபிகல்லின் புகாரையடுத்து கேஸ்டிலோ மற்றும் லவுராவை பொலிசார் கைது செய்தனர்.

இருவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அபிகல்லின் வளர்ப்பு தாய் லவுராவுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லவுரவின் கணவர் கேஸ்டிலோ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: