மகளுக்கு, தந்தை செய்த கொடூர செயல்! காதலித்தது குற்றமா?

0
249

ஆரம்ப கால முதல் இன்று வரை காதலுக்கும் பெற்றோருக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

இந்த நவீன காலத்திலும் கூட கௌரவ கொலைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில், கௌரவ கொலை என்னும் பெயரில் பாகிஸ்தான் இளம்பெண், அவரது காதலர் தலை துண்டிக்கப்பட்டுள்ள சம்பம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தினை செய்தவர்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது மாமா. சம்பவத்தன்று தனது பெண்ணின் காதல் விவகாரம் குறித்து அறிந்த தந்தை தன் மைத்துநருடன் வீட்டிற்கு சென்று தன மகள் மற்றும் அவரது காதலனை கட்டி வைத்து கழுத்தறுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவரது தலைகளும் துண்டாகியுள்ளது என உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒன்று பாகிஸ்தானுக்கு புதிது அல்ல. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது 280-வது கௌரவ கொலை ஆகும். ஜநா மனித உரிமைகள் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி அக்டோபர் 2016 – ஜூன் 2017 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 280 கௌரவ கொலை வழக்குகள் பாக்கிஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: