மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0

மகரம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்துகொண்டு பலன்களைத் தடுத்த சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்ந்து நற்பலன்களைத் தரப்போகிறார். கட்டுக்கடங்காத செலவுகளும் அடுக்கடுக்காக ஏற்பட்ட பிரச்னைகளையும் சிரமமின்றி சந்திப்பீர்கள். தண்ணீரும் தாமரை இலையுமாக ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள், அல்லாதவர்கள் யாரென்பதை உடனே புரிந்துகொள்வீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. ஜென்மச்சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவர்வழியில் கொஞ்சம் அலைச்சலும் செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் உறவினர்களால் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். இந்த சனி மாற்றம் சங்கடங்கள், சவால்களில் வெற்றியையும் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !
Next articleகும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !