மகனை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கசிந்த ரகசியம். ஒரு தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!

0
373

திருச்சி மாவட்டத்தில் தனது தாயின் காதல் விவகாரத்தை அறிந்துகொண்ட மகன் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட தொழிலாளியாக இருக்கும் மீனாம்பாள் என்பவரின் கணவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோயின் காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு அங்குராஜ் என்ற மகன். 14 வயதான அவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குராஜ், வீட்டில் மயங்கி விழுந்துவிட்டதாக மீனாம்பாள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, வீட்டிற்கு கொண்டு வந்து அனைவர் முன்னிலையிலும் அழுதுள்ளார்.

இந்த சிறுவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அறிந்துகொண்ட பக்கத்துவீட்டார் பொலிசிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மீனாம்பாள் வீட்டிற்கு விரைந்து வந்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொத்தனார் வேலை செய்யும் முத்தழகு என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி என்னை பார்ப்பதற்காக எனது வீட்டிற்கு வருவார்.

அப்போது நாங்கள் குடி கும்மாளம் என சந்தோஷமாக இருப்போம். எனக்கு அடுத்ததாக எனது தோழி லட்சுமியையும் முத்தழகு காதலித்தார்.

3 பேரும் தண்ணி அடித்துவிட்டு, 3 பேரும் சந்தோஷமாக இருப்போம். நான் செய்யும் தவறை மகன் தன் கண்ணாலேயே பார்த்துவிட்டான்.

இதனால் அங்குராஜ் தனியாக அழுதிருக்கிறான். அம்மாவை வெறுக்கவும் முடியாமல், கண்டிக்கவும் வயதில்லாமல், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி, அம்மாவை திருத்த சொன்னான்.

உறவினர்கள எனது கள்ளக்காதலை கைவிட சொல்ல, என் மகன் மீது வெறுப்பும் ஆத்திரமும் வந்து அவனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

அங்குராஜ் தூங்கபோகும்போது, குடிக்கும் பானம் ஒன்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். நான் கொடுத்ததால் பேசாமல் வாங்கி குடித்துவிட்டு தூங்க சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து லட்சுமியும், அங்குராஜ்ம் கழுத்தை கயிற்றால் நெரித்தனர்.

தன் கண் முன்னாலேயே கை, கால்களை உதைத்துக்கொண்டு மகன் துடிதுடித்து சாவதை பார்த்துள்ளார் மீனாம்பாள், பிறகு அவன் இறந்துவிட்டதை முத்தழகனிடம் சொல்ல, முத்தழகனோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடுங்கள் என ஆலோசனை கொடுத்ததையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று நாடகம் ஆடியுள்ளனர்.

இரு பெண்களையும் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் பொலிசார் அடைத்தனர். கூடவே இருந்து குடித்துவிட்டு ஆட்டம்போட்ட முத்தழகன், கள்ளக்காதலிகள் இருவரும் கம்பி எண்ணுவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். அவரை பொலிசார் தேடி வருகின்றனர்,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: