மகனுடன் சென்ற தாய்க்கு வீதியில் நடந்த கொடூரம்! சி.சி.ரி.வி காணொளியில் சிக்கிய காட்சி

0
449

பாதையோரமாக மகனுடன் சென்று கொண்டிருந்த தாயொருவர் வேகமாக சென்ற வேனில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது அவரது காலொன்று முறிந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவங்கள் அடங்கிய சி.சி.ரி.வி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

வாகனத்தின் வேகத்தினால் மோதுண்ட பெண் சுமார் 50 அடி வரை தூக்கியெறியப்பட்டார். இதேவேளை, பெண்ணை மோதித் தள்ளிய வேன் நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: