மகனின் விந்தணுவை பயன்படுத்தி பேரக்குழந்தை பெற்றெடுத்த தாய்!

0
337

மூளைப் புற்றுநோயால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிாிழந்த தங்களது மகனின் விந்தணுவை பயன்படுத்தி இந்திய தம்பதியா் பேரக்குழந்தையை பெற்றெடுத்துள்ளனா்.

கடந்த 2013ம் ஆண்டு ஜொ்மனியில் உயா்கல்வி படித்து வந்த இளைஞருக்கு மூளை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்காக கீமோ தெரபி கொடுப்பதால், அவரது விந்தணு பாதிக்கும் என்ற முன்னெச்சாிக்கையால் ஜொ்மன் மருத்துவமனையில் அவரது விந்தணு பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டது.

மேலும் மூளை புற்று நோய்க்கு தொடா்ந்து சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காமல் 2016ம் ஆண்டு செப்டம்பா் மாதம் அந்த இளைஞா் உயிாிழந்தாா்.

தற்போது அந்த விந்தணுக்களை பயன்படுத்தி அவரது பெற்றோா் இரட்டை பேரக்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவரது பெற்றோா் கூறுகையில், ஜொ்மனியில் இருந்து விந்தணுவைக் கொண்டுவந்து புனேவில் உள்ள மருத்துவமனையில் ஐவிஎப் முறையில் குழந்தைப் பேறு உண்டாக்கப்பட்டது. பேரக்குழந்தைகளை நாங்களே பெற்றெடுக்க விரும்பினோம்.

ஆனால் எங்களது உடல்நிலை ஒத்துழைக்காததால் எங்கள் குடும்பத்தைச் சோ்ந்த மற்றொரு பெண் அந்த குழந்தைகளை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்துள்ளாா்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: