போதையில் பங்குதாரரின் மனைவியை பலாத்காரம் செய்த கொடூரன்!

0
805

போதையில் பங்குதாரரின் மனைவியை பலாத்காரம் செய்த கொடூரன்!

இந்தியாவின் டெல்லியில் வியாபார பங்குதாரரின் மனைவியை நபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வியாபார ரீதியாக சாகர் ஷெட்டி என்னும் நபரும் அவரது நண்பரும் பங்குதாரராக இருந்துள்ளனர்.

இந்நிலையில் சாகர் ஷெட்டியின் நண்பர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவரது மனைவி தான் அலுவலக பணிகளை கவனித்து வந்துள்ளார்.

முகர்ஜி நபர் பகுதியில் தனியாக வசித்து வரும் அந்த 34 வயது பெண் அலுவலக பணி முடிந்து கடந்த 2-ஆம் திகதி மாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அத்துமீறி அப்பெண் வசித்து வந்த வீட்டிற்குள் நுழைந்த கணவரின் நண்பரான சாகர் ஷெட்டி, குடுபோதையில் அப்பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

மேலும் இது குறித்து பொலிசாரிடமோ அல்லது கணவரிடமோ கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ள அந்த நபர் குறித்து டெல்லி போலிசிடம் பாதிக்கப்பட்ட குறித்த பெண் புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரை ஏற்ற டெல்லி பொலிஸ், அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைக்கு பின் கற்பழித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: