போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த ஐ.எஸ் அமைப்பின் கப்பல்கள்; கைப்பற்றிய கடற்படை!

0
603

பாகிஸ்தான் கடற்கரை நகரமான கராச்சியிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த இரண்டு கப்பல்கள் தொடர்பில் இந்திய பாதுகாப்பு பிரிவு வழங்கிய தகவலை அடுத்து குறித்த இரண்டு கப்பல்களையும் ஸ்ரீலங்கா கடற்படை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளதாக WION செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்திய புலனாய்வு அமைப்புகளின் தகவலின்படி, இந்த போதைப்பொருள் வர்த்தகம் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.க்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது, மேலும் அவர்கள் இதை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய வர்த்தகம் மூலம் கிடைக்கும் நிதி இலங்கையில் தீவிரவாத சித்தாந்தத்திற்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

போதைப்பொருள் வணிகத்துக்கு கடல் பாதை பாதுகாப்பானது என்றும், படகுகள் மற்றும் கப்பல்கள் இந்த போதைப்பொருட்களை ஒரு வழக்கமான அடிப்படையில் கொண்டு செல்கின்றன என்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கருதுகின்றன.

இந்திய கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படை சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பகுதிகளில் தங்கள் கடல் எல்லையில் நெருக்கமாக செயல்படுகின்றன.

இதேவேளை கொழும்பு கடற்பகுதியில் நேற்றும் இன்றும் இரண்டு மீன்பிடி கப்பல்களை ஸ்ரீலங்கா கடற்படை போதைப்பொருட்களுடன் கைப்பற்றியுள்ளதுடன் நால்வரையும் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: