Home Paati Vaithiyam கர்ப்பம் தங்காமல் போவதற்கு 7 முக்கிய காரணங்கள்! தடுக்கும் வழிகள்!

கர்ப்பம் தங்காமல் போவதற்கு 7 முக்கிய காரணங்கள்! தடுக்கும் வழிகள்!

0
15536

கர்ப்பம் தரிப்பது பெண்ணிற்கு உன்னதமான தருணம். அப்போதிருந்தே பயம் கலந்த மகிழ்ச்சியான ஒரு இனம் புரியாத உணர்விற்கு ஒவ்வொரு பெண்ணும் ஆளாவார்கள்.

ஆனால் எல்லா பெண்களுக்கும் அந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை. சிலருக்கு திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, ரத்தப் போக்கு உண்டாகும். ஏனென்று பரிசோதித்தால் கர்ப்பம் கலைந்திருக்கும்.

கர்ப்பம் தங்காமல் கலைந்து போவதற்கான 7 முக்கியமான காரணங்களையும் தீர்வுகளையும் மருத்துவர்கள் கூருகிறார்கள். கேளுங்கள்.

இயல்பற்ற குரோமோசோம் :

குரோமோசோம் 23 ஜோடிகள் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். அதாவது அம்மாவிடமிருந்து ஒரு ஜோடி , அப்பாவிடமிருந்து ஒரு ஜோடி என மொத்தம் 46 குரோமோசோம் இருக்கும்.

இந்த எல்லா குரோமோசோமும் சரியாக தன் இணையிடன் சேர்ந்து ஒரு குணம், நிறம், பாலினம் ஆகியவற்றை தீர்மானிக்கும். இப்படிதான் கரு உண்டாகும்.

பெண்ணின் கருவிடம் ஆணின் விந்தணு சேரும்போது இருவரின் குரோமோசோம் சரியான விதத்தில் இணையவில்லையென்றால், அங்கே கருக்கலைப்பு உண்டாகும்.

இந்த விதமான கருக்கலைப்பு 60 சதவீதம் நடப்பதாக அமெரிக்கா மிஸிஸிபி பல்கலைக் கழக மகப்பேறு மருத்துவர் ப்ரையான் கோவான் கூறுகிறார்.

தீர்வு :

இதுதான் காரணம் என்று தெரிந்தால், ரிலாக்ஸாக இருங்கள். பொறுமையாகவும் இருங்கள். உங்கள் விந்தணு மற்றும் கருவை பரிசோதித்து குரோமோசோமில் உள்ள பாதிப்பை நீக்க தகுந்த சிகிச்சை கொடுத்தால் நிச்சயம் அழகான குழந்தையை பெறுவீர்கள்.

கர்ப்பப்பை மற்றும் அதன் வாய் :

கர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது அது இரண்டாக விரிவாகியிருந்தாலோ, உருவான கரு கர்ப்பப்பையில் தங்க முடியாமல் வெளியேறிவிடும் அல்லது போதிய போஷாக்கு இல்லாமல் கலைப்பு உண்டாகிவிடும்.

இந்த பாதிப்பிற்கு ” யூடரின் செப்டம் என்று பெயர்” அதேபோல் கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கரு பையில் தங்காது.

தீர்வு :

கவலை வேண்டாம். இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம்.

அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தில் கோளாறு :

நம் உடலில் கிருமிகளோ அல்லது உடல் சம்பந்தமல்லாத வேறோரு பொருளோ உள்ளே சென்றால் நம் நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்ப்பு காண்பிக்கும்.

சிலருக்கு அவ்வாறு ஆணின் விந்தணு உள்ளே வந்ததும், நோய் எதிர்ப்பு செல்கள் எதிர்ப்பு காண்பிக்கும். உடனேயே கருவுற்ற பெண்ணின் முட்டை , நோய் எதிர்ப்பு மண்டலத்திடம் முறையிடும். இது தனக்கு வேண்டப்பட்டதுதான் என்று. இதனால் கரு தப்பிக்கும்.

அப்படியும் கேட்காமல் சில பெண்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் காட்டும் எதிர்ப்பின் விளைவாக கருக்கலைப்பு உண்டாகும்

தீர்வு :

இதன் தொடர்பாக ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. தெளிவான சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் சில ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டு சிகிச்சையில் வெற்றி பெற்றதாக மருத்துவர் கூறுகிறார்.

தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதி :

தைராய்டு பிரச்சனை மற்றும் சர்க்கரை வியாதி இரண்டுமே கர்ப்பப்பையை நல்ல சூழ் நிலைக்கு வைத்திருக்க உதவாது. இவற்றால் கருக்கலைப்பு அதிக சாத்தியம் உள்ளது.

தீர்வு :

இதற்குசரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுதல் அவசியம். ஹார்மோன் மற்றும் குளுகோஸின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குழந்தைக்கான சாத்தியம் உருவாகும் .

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) :

இந்த கோளாறு பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகிறது.

அதிக உடல் பருமன், மீசை வளர்தல், ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் அதிகமாக சுரத்தல், முறையற்ற மாதவிடாய் ஆகியவை பெண்ணிற்கு ஏற்படும். இது கருகலைப்பிற்கு காரணமாகும்.

தீர்வு :

ஆன்டிபயாடிக் சிகிச்சையின் மூலம் (PCOS) வினால் உண்டாகும் கருக்கலைப்பை சரி செய்துவிடலாம்.

பேக்டீரியா தொற்று :

பெண் அல்லது ஆணின் பிறப்புப் பாதையில் பேக்டீரியா தொற்று உண்டாகியிருந்தால் அவை கருவை பாதித்து கருக்கலைப்பிற்கு காரணமாகிவிடும்.

அதேபோல் எண்டோமெட்ரியல் கருவிற்கும் இந்த பேக்டீரியா தொற்று காரணமாகிவிடும்.

தீர்வு :

தகுந்த ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம்.

புகை மற்றும் மதுப் பழக்கம் :

நிகோடின் தொப்புள் கொடியின் மூலம் கருவிற்கு தாயிடமிருந்து செல்லும் ரத்தத்தை தடுத்துவிடும்.

இதனால் போதிய ரத்தம் இல்லாமல் கரு முழுதாக உருவாக முடியாமல் கலைந்து போய்விடும்.

அதுபோல் குடிப்பதும் அதிலுள்ள ஆல்கஹால் ரத்தத்தில் கலந்து நச்சுக்களை தொப்புள் கொடிக்கு செலுத்தி விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

error: No No Don\'t Try !!