போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட இரட்டை குழந்தைகளின் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
746

போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட இரட்டை குழந்தைகளின் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணிற்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இதேவேளை, அன்றைய தினத்தில் மற்றுமொரு பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால் அவரின் சிசு இறந்துவிட்டதாக தெரியவந்துள்ள நிலையில் வைத்தியசாலை உத்தியோகத்தரினால் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மாற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

மேலும்,முறைப்பாட்டில் எதிராளியாக குறிப்பிடப்பட்டுள்ள பெண் வெளிநாட்டில் உள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: